search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்வரத்து குறைந்தது"

    தென் மாவட்டங்களில் நேற்றும், இன்றும் எந்தவித மழை பொழிவும் இல்லாததால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு கூடுதல் நீர் வந்தது. இதைத்தொடர்ந்து பாபநாசம் அணை நீர்மட்டம் 124 அடியை தாண்டியது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டி 104 அடியானது.

    இந்த நிலையில் தென் மாவட்டங்களில் நேற்றும், இன்றும் எந்தவித மழை பொழிவும் இல்லை. இதன் காரணமாக அணைகளுக்கு குறைந்த அளவு நீர் வருகிறது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 827 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 804 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை பாபநாசம் அணை நீர்மட்டம் 124.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 134.74 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 315 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 104.25 அடியாக உள்ளது.

    கடனாநதி-78.80, ராமநதி- 69.25, கருப்பாநதி-67.03, குண்டாறு-35.87, வடக்கு பச்சையாறு-31.50, நம்பியாறு-18.66, கொடுமுடியாறு-35, அடவிநயினார்-93.25 அடிகளாகவும் நீர்மட்டம் உள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழ்நிலை உள்ளதால் 5-ந்தேதிக்கு பிறகு மீண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 4,800 கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சில நாட்கள் அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    நேற்று நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 4,800 கனஅடியாக குறைந்தது. இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து இருந்தனர்.

    குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வந்திருந்தனர். அவர்கள் மெயின் அருவி, மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். பரிசலில் சவாரி செய்து ஒகேனக்கல் இயற்கை அழகை ரசித்தனர்.

    சுற்றுலா பயணிகள் வருகையால் மீன் மார்க்கெட் களைகட்டி இருந்தது. மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள் ஆகியோருக்கு அதிக அளவில் வருமானம் கிடைத்தது. பயணிகள் கூட்ட நெரிசலால் ஒகேனக்கல்லில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. #Hogenakkal

    ஒகேனக்கல்லுக்கு நேற்று 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று குறைந்து 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    ஒகேனக்கல்:

    கடந்த சில நாட்களாகவே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது.

    நேற்று 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று குறைந்து 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விடுமுறை நாளான நேற்றும், நேற்று முன்தினமும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இன்று மகாளய அமாவாசை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. தர்ப்பணம் மற்றும் திதி கொடுக்க வந்தவர்களும் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளும், காவிரி ஆற்றிலும் குளித்தனர்.

    வழக்கமாக ஒகேனக்கல்லில் மீன் விற்பனை அதிகமாக இருக்கும். இன்று பூக்கள் மற்றும் தேங்காய், பழம் விற்பனை அதிகமாக இருந்தது.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 23 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக மேலும் குறைந்தது.
    ஒகேனக்கல்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்டறம்பாளையம் போன்ற காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மெயினருவிக்கு செல்லும் நடைபாதை மேல் தண்ணீர் சென்றது.

    நேற்று மழை குறைந்ததால் மாலை நீர்வரத்து படிப்படியாக குறைந்து 23 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக மேலும் குறைந்தது.

    நேற்று நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் சீரமைக்கப்பட்ட மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. மெயினருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இன்று நீர்வரத்து குறைந்தும் மெயினருவியில் குளிக்க மாவட்ட சார்பில் மெயினருவியில் 94-வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.


    ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து குறைந்து 8 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. மெயின் அருவியில் 3 நாட்களுக்குள் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல்லுக்கு நேற்று 9 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து குறைந்து 8 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. வழக்கம்போல சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோரம் குளித்து விட்டு செல்கிறார்கள்.

    மெயின் அருவியில் வெள்ளத்தின்போது ஏற்பட்ட சேதத்தால் பழுதடைந்த கம்பிகளை அகற்றிவிட்டு புதிய தடுப்பு கம்பிகளை அமைத்து உள்ளனர். இந்த கம்பிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை பென்னாகரம் வட்டார வளர்ச்சி அதிகாரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இன்னும் 2 நாட்களில் இந்த பணி முடிவடையும். அதன் பிறகு மெயின் அருவிக்கு வரும் தண்ணீரை வேறு வழியாக திருப்புவதற்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள் அகற்றப்படும். அதன் பிறகு மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். 3 நாட்களுக்குள் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்ய ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மீன் மார்க்கெட் அருகே உள்ள கோத்திக்கல் பாறையில் இருந்து பயணிகளை பரிசலில் ஏற்றி செல்லும் பரிசல் தொழிலாளர்கள் கூட்டாறு, ஐந்தருவி வழியாக மெயின் அருவிக்கு பயணிகளை சுற்றி காண்பிக்கிறார்கள்.

    மேலும் கர்நாடகத்தில் இருந்து வந்த தண்ணீரில் தற்போது மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. இந்த மீன்களை மீன்பிடி தொழிலாளர்கள் பிடித்து சமையல் தொழிலாளர்கள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு வறுத்து கொடுக்கிறார்கள். இந்த மீன்கள் சுவையுடன் இருப்பதாக சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்தார். #Hogenakkal #Cauvery

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 21 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் அதிகளவு கொட்டுகிறது.

    நேற்று ஒகேனல்லுக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    அதே போல கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1886 கனஅடியும், கபினி அணையில் இருந்து 1000 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க இன்று 57-வது நாளாக தடை நீடித்து வருகிறது. ஆனால் கோத்திக்கல் - மணல்திட்டு இடையே பரிசல் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமான பாதையில் பரிசல் இயக்கப்படவில்லை.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். #Hogenakkal #Cauvery

    கர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து இன்று காலை 31 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இன்று 50-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 26,590 கன அடியும், கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.

    தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல்லை கடந்து மேட்டூர் அணைக்கு செல்கிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக இருந்தது.

    நேற்று காலை 8 மணிக்கு நீர்வரத்து அதிகரித்து 34 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மாலையில் நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இன்று காலை இந்த நீர்வரத்து 31 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    இதனால் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கொட்டுகிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்கிறது.

    இன்று 50-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், வழக்கமான பாதை வழியாக பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. ஆனால் கோத்திக்கல் பாறையில் இருந்து மணல்திட்டு வரை இன்று 3-வது நாளாக பரிசல் இயக்கப்பட்டு வருகிறது.

    முதலைப்பண்ணை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் காவிரி கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.  #Hogenakkal #Cauvery
    இன்று காலை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்தது. எனவே பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது. #Periyardam
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப் பகுதியான தேக்கடியில் முல்லைபெரியாறு அணை உள்ளது. 155 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    கேரளாவில் தென்மேற்குபருவமழை தீவிரமடைந்ததால் இந்த ஆண்டு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே இந்த ஆண்டு 142 அடி நீர்மட்டத்தை தொட்டது. அதோடு உபரிநீர் இடுக்கி அணைக்கு திறந்துவிடப்பட்டதால் கேரளப்பகுதி வெள்ளத்தில் தத்தளித்தது.

    இன்று காலை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்தது. எனவே பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து இருந்தது. அது தற்போது 2974 கனஅடி நீர்வருகிறது. அணையின் நீர்மட்டம் 140.10 அடியாக உள்ளது. 2206 கனஅடிநீர் திறந்துவிடப்படுகிறது. அதாவது 1600 கனஅடிநீர் மின்உற்பத்தி நிலையம் மூலமும், 606 கனஅடிநீர் இரைச்சல் பாலம் வழியாகவும் திறந்துவிடப்படுகிறது.

    இந்த தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உள்ளது. அணைக்கு வரக்கூடிய 2190 கனஅடிநீர் அப்படியே பாசனத்திற்கு திறந்துவிடப்படுகிறது.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 41.85 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 117.75 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 3 கனஅடிநீர் திறந்துவிடப்படுகிறது. பெரியாறு அணைப்பகுதியில் 1 மி.மீ மழையும், தேக்கடியில் 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.  #Periyardam



    நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. #papanasamdam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென் மேற்கு பருவமழை காரண மாக கடந்த வாரம் கனமழை கொட்டியது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு அணைகள் தவிர மீதமுள்ள 9 அணைகளும் நிரம்பியது.

    பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லை. செங்கோட்டை, குண்டாறு மலைப் பகுதியில் மட்டும் சிறிய அளவில் சாரல் மழை பெய்து வருகிறது. குண்டாறு அணை பகுதியில் இன்று காலை வரை ஒரு நாள் மழை அளவு 9 மில்லி மீட்டர் ஆகும். அடவி நயினார் அணை பகுதியில் 5 மில்லி மீட்டரும், கடனாநதி, செங்கோட்டை நகர பகுதிகளில் 1 மில்லி மீட்டர் மழையும் இன்று காலை வரை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இன்று முற்றிலும் மழை குறைந்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2555 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து கால்வாய்களில் வினாடிக்கு 436 கனஅடி தண்ணீரும், கீழ் அணையில் இருந்து வினாடிக்கு 2396 கனஅடி தண்ணீர் ஆற்றிலும் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை 141.80 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 3084 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2593 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று 146.09 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 445 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 55 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 84.55 அடியாக உள்ளது. கடனாநதி அணை யில் 83 அடி தண்ணீரும், ராமநதி அணையில் 82.50 அடியும், கருப்பாநதி-70.21, குண்டாறு-36.10, வடக்கு பச்சையாறு-19, நம்பி யாறு-20.60, கொடு முடியாறு-52.50, அடவி நயினார்-132.22 அடி தண்ணீரும் உள்ளது.

    அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் வெள்ளம் குறைந்தது. #papanasamdam

    ×